தேசிய அளவில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேசிய அளவில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு

ஐதராபாத்: ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், இதற்காக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதாவை உடனடியாக நிறைவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு வேண்டாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதே நேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளுடன் புரிந்துணர்வு அடிப்படையில் இணைந்து செயல்படுவது எனவும், தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பிருந்தா காரத் கூறுகையில், ‘‘எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இதர இடதுசாரி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொள்வோம்.

நாங்கள் வலிமையாக உள்ள இடங்களில் போட்டியிடுவோம். மற்ற தொகுதிகளில் பாஜவை வீழ்த்த தகுதியானவர்களுக்கு வாக்களிக்கும்படி பிரசாரம் மேற்கொள்வோம்’’ என்றார்.



.

மூலக்கதை