ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படை தாக்குதல் : 31 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர். காபூலில் வாக்காளர் பதிவு மையம் உள்ளது. தேசிய அடையாள அட்டை சான்று வழங்கும் அலுவலகமும் அங்கு உள்ளது. இன்று காலை இந்த மையத்தின் வாசலில் தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகின. சம்பவத்தை தொடர்ந்து, அரசுக்கு எதிராகவும், தீவிரவாத அமைப்புக்கு எதிராகவும் பொது மக்கள் கோஷம் எழுப்பினர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பலர் காயமடைந்து உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மூலக்கதை