சீனா மாநாட்டில் இந்தியா - பாக்., அமைச்சர்கள் சந்திப்பில்லை

தினமலர்  தினமலர்
சீனா மாநாட்டில் இந்தியா  பாக்., அமைச்சர்கள் சந்திப்பில்லை

புதுடில்லி: சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அமைச்சர்கள் சந்தித்து பேச மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அந்நாட்டு தலைவர்களை சந்திக்கும் அவர், ஏப்.,24ம் தேதி பெய்ஜிங்கில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டிலும் பங்கேற்கிறார். அதேநாளில், பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாடும் தனியாக நடக்கிறது. அதில், இந்தியா சார்பில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார். இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் பாகிஸ்தான் உறுப்பினராக உள்ளதால், இரு நிகழ்ச்சிகளிலும் அந்நாட்டு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது இரு நாட்டு அமைச்சர்களும் சந்தித்து பேச மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.
லண்டனில் காமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசியும் கலந்து கொண்டனர். ஆனால், இருவரும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை