யாழில் சங்கிலியை அறுத்துவிட்டு அலைபேசியை கைவிட்டு தப்பியோடிய கொள்ளையர்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் சங்கிலியை அறுத்துவிட்டு அலைபேசியை கைவிட்டு தப்பியோடிய கொள்ளையர்!

சங்கிலியைப் பறித்த கொள்ளையர் தப்பி ஓடும்போது தமது அலைபேசியைத் தவறவிட்டு சென்ற சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

 
சிசிரிவி கமரா கைகொடுத்ததால் கொள்ளையர் தப்ப, அவர்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் சிக்கியுள்ளனர்.
 
இந்தச் சம்பவம் சித்தங்கேணி பிள்ளையார் கோவிலடியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றது. 
 
மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையர் இருவர் வீடு ஒன்றின் முன்பாக நின்று முகவரி கேட்பது போல் பாசாங்கு செய்து பெயர் ஒன்றைக்கூறிக்கேட்டுள்ளார்.
 
அந்தக் குடும்பப் பெண்ணுக்கு கொள்ளையர் கேட்ட பெயர் தெரியாததால் அந்த இடத்தை அண்மித்து நின்றிருந்த மற்றொருவரை அழைத்தபோதே கொள்ளையர் பெண்ணிடமிருந்து சங்கிலியை அறுத்துச் சென்றனர். அவர் கூக்குரலிட அவர கணவனும் அந்த இடத்தை அண்மித்தபோது கொள்ளையர் தப்பியோடினர்.
 
அதன்போது அவர்களில் ஒருவரது அலைபேசி தவறி வீழ்ந்துவிட்டது. தம்மைப் பிடித்துவிடுவார்களோ என்ற அச்சம் காரணமாகவோ கவனிக்காமலோ அவர்கள் இந்த இடத்திலிருந்து தப்பியோடினர்.
 
ஆனால் வீழ்ந்த அலைபேசியை அவர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்தனர்.
 
மூன்றரைப் பவுண் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. 
 
இது தவிர, கொள்ளை நடந்த இடத்தில் சிசிரி கமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாக கொள்ளையர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கம் அடையாளங்கள் பதிவாகின.
 
அதனடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரது பெயரில் அது பதிவாகியுள்ளமை தெரியவந்தது. 
 
அவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார். கொள்ளையர்கள் இன்னும் பிடிபடவில்லை. தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
 

மூலக்கதை