சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி

தினமலர்  தினமலர்
சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி

நான் சபானா படத்தை அடுத்து தெலுங்கில் ஆனந்தோ பிரம்மா படத்தில் நடித்தார் டாப்சி. அதையடுத்து இந்தியில் டட்கா, முல்க், மன்மர்ஷியன் என வரிசையாக சில படங்களில் நடித்தார்.

மேலும், தான் ஒரு படத்தில் நடித்து முடித்ததும் வெளிநாடுகளுக்ளு ஜாலி டூர் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த டாப்சி, கடந்த 6 மாதங்களாக எந்த வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாமல் படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது படப்பிடிப்புகளுக்கு ஒரு பிரேக் கொடுத்து விட்டு தனது தங்கை ஷாகன் பன்னுவுடன் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள் ளார் டாப்சி. இந்த செய்தியை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள டாப்சி, தங்கையுடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் வெளியிட்டிருக்கிறார்.

மூலக்கதை