ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள்

தினமலர்  தினமலர்
ஏப்ரல் 27ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள்

கடந்த ஐம்பது நாட்களாக தமிழ்த்திரையுலகில் நீடித்து வந்த ஸ்டிரைக் முடிவடைந்திருப்பதை அடுத்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், முதல் படமாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள மெர்குரி படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 27-ந்தேதி மூன்று படங்கள் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த்சாமி நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஏ.எல்.விஜய்யின் தியா, விக்ரம் பிரபுவின் பக்கா ஆகிய படங்கள் அடுத்த வார ரிலீஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மூலக்கதை