கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா

தினமலர்  தினமலர்
கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா

கடந்த சில வாரங்களாகவே தெலுங்கு சினிமாவை பதற வைத்து வருபவர் ஸ்ரீரெட்டி. அவரது ஸ்ரீலீக்ஸ் பட்டியலில் அபிராம், கோனா வெங்கட், கொரட்டல சிவா என சிலரது பெயர்கள் வெளியானது. அதையடுத்து டாக்டர் ராஜசேகருக்கு அவரது மனைவி ஜீவிதாவே பெண்களை படுக்கைக்கு அனுப்பி வருவதாக சமூக ஆர்வலர் சந்தியா என்பவர் டிவி சேனல் பேட்டி யில் தெரிவித்ததை அடுத்து அந்த விசயம் வேறு கோணத்தில் திசை திரும்பியது.

இதனால், சந்தியா மீதும், அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த சேனல் மீதும் வழக்கு தொடரப் போவதாக சொன்ன ஜீவிதா, தான் கணவருக்கு பெண்களை அனுப்பியதாக சொல்லும் சந்தியா அதை நிரூபிக்க வேண்டும் என்று காரசாரமாக பேட்டி கொடுத்தார். அதோடு, தான் 24மணி நேரமும் செக்ஸ் மூடிலேயே இருப்பதாக ஸ்ரீரெட்டி கூறியிருந்த பேஸ்புக் வீடியோ ஒன்றையும் மீடியாக்களுக்கு வெளிச்சம் போட்டார் ஜீவிதா.

அதைத் தொடர்ந்து, ஜீவிதா கேட்ட ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக சொல்லி அவருக்கு ஒரு பெரிய ஷாக் கொடுத்தார் ஸ்ரீரெட்டி.

இப்படியான சூழ்நிலையில், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற பாலியல் சம்பவங்களுக்கு மரண தண்டனைதான் ஒரே தீர்வு என்று பலரும் கருத்து சொல்லி வந்ததை அடுத்து மத்திய அரசும் அதற்கான சட்டத்தை உருவாக்க தயாராகி விட்டது.

ஆனால் இப்போது ஸ்ரீரெட்டி தனது சார்பில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் அரசாங்கத்திற்கே ஐடியா கொடுத்துள்ளார். அது என்ன வென்றால், செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள்தான் ஆசிபா போன்ற சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள். அதனால் அரசாங்கம் சிகப்பு விளக்கு ஏரியாவை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் கற்பழிப்பு கொலைகள் நடப்பது குறை வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

மூலக்கதை