வினாடி - வினா போட்டி : இந்திய மாணவர் வெற்றி

தினமலர்  தினமலர்

நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற வினாடி - வினா போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றுள்ளார். இதில், அவருக்கு பரிசுத் தொகையாக, 65 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
அசத்தல் : அமெரிக்காவின், ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி மாணவர், துருவ் கவுர். இவர், ஐவி லீக் பிரவுன் பல்கலைக்கழகத்தில், பொது சுகாதாரம் மற்றும் பொருளியல் முதலாமாண்டு படித்து வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற, 'ஜியோபார்டி கல்லுாரி சாம்பியன்ஷிப்' வினாடி - வினா போட்டியில், துருவ் பங்கேற்றார். இவருடன், 14 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில், துருவ் அசத்தலாக பதில் சொல்லி வெற்றி பெற்றார்.
நம்ப முடியவில்லை : இவருக்கு, ஜியோபார்டி கல்லுாரி சாம்பியன்ஷிப் பட்டமும், பரிசுத் தொகையாக, 65 லட்சம்ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம், சாம்பியன்ஸ் இடையிலான போட்டிக்கு, துருவ் தகுதி பெற்றுள்ளார்.
இது குறித்து, துருவ் கூறுகையில், ''இந்த போட்டியில் வெற்றி பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை. ''இதில் கிடைத்த பரிசுத் தொகையை எப்படி செலவு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை,'' என்றார்.

மூலக்கதை