இசைக்கலைஞர் ஆவிசி ஓமனில் மர்ம மரணம்

தினமலர்  தினமலர்

மஸ்கட்: ஐரோப்பாவின் பிரபல மின்னணு நடன இசைக் கலைஞர், ஆவிசி என்றழைக்கப்படும் டிம் பெர்கிளிங், 28, மர்மமான முறையில் உயிரிழந்தார்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவீடனில் பிறந்த ஆவிசி, 16 வயது முதல், 'டிஸ்கோ ஜாக்கி' என்றழைக்கப்படும், டி.ஜே., இசையமைப்பாளர் மற்றும் மின்னணு நடன இசைக் கலைஞராக வலம் வந்தார்.கடந்த, 2014ல், அதிகமான குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆவிசிக்கு, அறுவை சிகிச்சை மூலம், பித்தப்பை மற்றும் குடல் வால் அகற்றப்பட்டது. மேடை நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த ஆவிசி, 2016ல், தன் இசை சுற்றுப் பயணத்தை நிறுத்தினார். பின், இசை பதிவில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.இந்நிலையில், மேற்காசிய நாடுகளில் ஒன்றான, ஓமன் தலைநகர் மஸ்கட்டில், நேற்று முன்தினம் இரவு, உயிரிழந்த நிலையில், ஆவிசியின் உடலை போலீசார் மீட்டனர். ஆவிசியின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என போலீசார் கூறினர்.கிராமி விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்ட ஆவிசி, 'எம்டிவி' மற்றும் 'பில்போர்டு' இசை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

மூலக்கதை