வெளிநாட்டில் இலங்கை பெண் செய்த காரியம்! 2 வருட சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம்

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாட்டில் இலங்கை பெண் செய்த காரியம்! 2 வருட சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 
வயோதிபரிடம் 170,000 டொலர் கொள்ளையடித்த பெண் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வயயோதிபரிடம் பணி பெண்ணான செயற்பட்டு கையொப்பம் ஒன்றை பெற்றுக் கொண்ட பெண் அவரது கடன் அட்டையை பயன்படுத்தி இவ்வாறு கொள்ளையடித்துள்ளார்.
 
மஞ்சுலா கெம்ப்ஸ்டர் என்ற 57 வயதான இலங்கை பெண் ஒருவருக்கே இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
2015ஆம் ஆண்டு Raymond Woff என்ற 83 வயதான அவுஸ்திரேலிய நாட்டவரிடமே அவர் இவ்வாறு கொள்ளையடித்துள்ளார்.
 
Victorian நாட்டு நீதிமன்றத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட வயோதிபர் உங்களை நம்பினார் என நீதிபதி Paul Grant குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
 
அவரது குடும்பம் உங்களை நம்பியது. அவர்களது நம்பிக்கையை நீங்கள் துஷ்பிரயோகம் செய்துவிட்டீர்கள் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 
Woff இன் மகளுடன் நண்பியாக இருந்த மஞ்சுளா 24 மணித்தியாளும் 83 வயதான தந்தை பார்த்து கொள்ளும் பணியை ஏற்றுக் கொண்டார்.
 
கடந்த 19 மாதங்களாக மஞ்சுளா Woff இன் கையொப்பங்களை 38 முறை பெற்றுக் கொண்டு அவரே காசோலைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய காசோலையின் பெறுமதி 170,568.13 டொலராகும்.
 
மற்றுமொரு காசோலையில் 13,000 டொலர் பெற்றுக் கொள்ள அவர் முயற்சித்துள்ளார்.
 
இலங்கையில் பிறந்த குறித்த பெண் Woffஇடம் 100க்கும் அதிகமான தடவைகள் பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
கடந்தாண்டு இரண்டு குற்றச்சாடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
 
அத்துடன் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பணி செய்த வீட்டில் தங்கியிருந்த 15 வயதான சிறுவனின் கடன் அட்டையையும் திருடி பணம் பெற்றுள்ளார்.
 
2017ஆம் ஆண்டு குற்றச்சாட்டிற்காக 700 டொலர் அபராதம் செலுத்தியிருந்தார்.
 
அவரது குற்றச்சாட்டுகள் உறுதியாகிய நிலையில் அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதற்கு நீதிபதி Paul Grant தீர்மானித்துள்ளார்.

மூலக்கதை