அணு ஆயுத சோதனை இனி இல்லை : வடகொரியா திடீர் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
அணு ஆயுத சோதனை இனி இல்லை : வடகொரியா திடீர் அறிவிப்பு

பியாங்யாங்: வட கொரியா இனி அணு ஆயுத சோதனை நடத்தாது என அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது.அமெரிக்கா, தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதித்தது. இதையடுத்து வட கொரியாவுக்கு பொருளாதார தடைகளை உலக நாடுகள் விதித்தன. மேலும் வடகொரியாவின் செயல்பாடுகளுக்கு சீனாவே காரணம் என்றும் ஐ.நா. சபையில் பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டின.இந்நிலையில் மோதல் போக்கை கைவிட்டு நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் தெரிவித்தார். அடுத்த மாதம் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.இந்நிலையில் அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் அறிவிப்பு உலக அமைதி முயற்சியில் முக்கிய முன்னேற்றம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை