கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 41 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 74 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. மழை நின்ற போது மீண்டும் போட்டி தொடங்கியது. போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டு 125 ரன்கள் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து களமிறங்கிய கெய்ல், ராகுல் கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இறுதியில் 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் 27 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து நரைன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் கிறிஸ்கெய்ல் 38 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இது பஞ்சாப் அணிக்கு 4 வெற்றியாகும்.

மூலக்கதை