அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் இம்மானுவல் மக்ரோன்!!

PARIS TAMIL  PARIS TAMIL
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் இம்மானுவல் மக்ரோன்!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், வரும் திங்கட்கிழமை காலை அமெரிக்கா பயணமாக உள்ளார். இது மக்ரோனின் முதல் அமெரிக்க பயணமாகும். 
 
மக்ரோன், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், தேசிய தின நிகழ்வுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை அழைத்திருந்தார். அதன் பின்னரும் இருவரும் சந்திப்பு நிகழ்த்தியிருந்தனர். இந்நிலையில், இம்மானுவல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜித் மக்ரோன் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கின்றனர். ட்ரம்ப் தம்பதியினர் இவர்களை வரவேற்கின்றனர். 
 
தவிர, அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மக்ரோனை எலிசே மாளிகையில் வைத்து நேர்காணல் கண்டது. இந்த நேர்காணல் நாளை ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

மூலக்கதை