`கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் அதிரடி!’ - கொல்கத்தா அணி 191 ரன்கள் குவிப்பு

விகடன்  விகடன்
`கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் அதிரடி!’  கொல்கத்தா அணி 191 ரன்கள் குவிப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல்லில் வீக்கெண்டு என்றாலே டபுள் தமாக்கா தான். அதிலும் இன்றைய போட்டியின் கேப்டன்கள் இருவரும் சென்னைப் பசங்க!. தமிழகத்துக்காக பல ஆண்டுகள் ஒரே அணியில் டொமஸ்டிக் சீசன் விளையாடும் போட்டி. அதிலும் இருவரும் தமிழகத்துக்காக கேப்டனாக இருந்தவர்கள். தற்போது இருவரும் கேப்டன். பஞ்சாப் தமிழன் வெர்சஸ் கொல்கத்தா தமிழன் தான் இந்த மேட்சின் ஒரே ஹைலைட்.. இரு கேப்டன்களும், தங்கள் டீம்களை டாப் 4ல் வைத்திருந்தது சிறப்பு.

கடந்த போட்டியில் பேட்டிங் தேர்வு செய்து வெற்றி பெற்றிருந்தாலும், மீண்டும் ஃபீல்டிங் சென்டிமென்ட்டில் தஞ்சம் புகுந்துவிட்டார் அஸ்வின். டாஸ் வென்றதும், சேஸிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விக்கெட் வீழ்த்தியிருந்தாலும், ரன்களை வாரி வழங்கிய மோஹித் ஷர்மாவுக்கு பதில், ராஜ்பூத்தை தேர்வு செய்திருந்தார். தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா வெற்றிக் கூட்டணியை மாற்றாமல் அப்படியே களமிறங்கியது. 

ரஹ்மான் வீசிய இரண்டாவது ஓவரில் லெக் திசையில், சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, லாங் ஆனில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் நரேன் 1(4). அடுத்து களமிறங்கிய உத்தப்பா ரஹ்மான் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அதிரடி மோடை, லின்னுடன் ஆரம்பித்தார். பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா. லின் 24 (19), உத்தப்பா 27 (20) . 

வழக்கம் போல, அஷ்வின் பவர்பிளே முடிந்ததும் தன் கோட்டாவை ஆரம்பித்தார். கடந்த போட்டியில் ( 4 - 0 - 53 - 0) நடந்ததை, மறந்து , அட்டகாசமாக முதல் ஓவர் வீசினார். ஆனால், அதற்கு  அடுத்து பந்துவீச வந்த பர்விந்தர் ஸ்ரன் ஒட்டுமொத்த போட்டியின் போக்கையே மாற்றிவிட்டார். முதல் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் உத்தப்பா ஒரு சிக்ஸ். லின் தன் பங்குக்கு மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ், மீண்டும் ஸ்குயர் லெக் திசையில் ஒரு சிக்ஸ். இந்த சீசனில் பஞ்சாபின் மோசமான பந்துவீச்சு இந்த ஓவர் தான். 23 ரன்கள் ( 6 1 4 6 0 6).

அடுத்தடுத்த ஓவர்களில் உத்தப்பாவும், ராணாவும் அவுட்டாக, 10 ஓவர்கள் முடிவில் 86/3 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா. அடுத்த ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்களுக்கும் குறைவில்லாமல், வெளுத்து வாங்கினர் தினேஷ் கார்த்திக்கும் லின்னும். அதிலும், டை வீசிய பந்தில், லின் லாங் ஆன் திசையில் அடித்த சிக்ஸ் 103 மீட்டர்!. அடேங்கப்பா லின்னே இப்படி அடிக்கறான்னா, கெயில் அடிக்கறதெல்லாம் கிரவுண்ட தாண்டிடும்ல மோடில் நம்பிக்கை வைத்து காத்திருந்தனர் டர்பன் பாய்ஸ். நல்ல பாலையெல்லாம் வெளுத்து வாங்கிய லின், கடைசியாக ஒரு டம்மி பாலில் அவுட்டானது தான் பெருஞ்சோகம். நான் பாட்டுக்கு செவனேன்னு தான போறேன் மோடில் ஃபுல் வய்டு அவுட்சைடு ஆஃப் திசையில் வந்த பந்தை அடிக்க ஆசைப்பட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 74 (41b 6x4 4x6). கேப்டன் தினேஷ் கார்த்திக் 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் இருந்த அதிரடி கடைசி ஓவர்களில் மிஸ்ஸாக, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடி வீரர் ரஸல், 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஆண்ட்ரு டை அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மூலக்கதை