மூன்றாம் உலக போர் நடக்குமா? ரஷ்யாவின் பதில்

PARIS TAMIL  PARIS TAMIL
மூன்றாம் உலக போர் நடக்குமா? ரஷ்யாவின் பதில்

ரஷ்ய ஜனாதிபதி புடின் சமாதானத்தை தான் விரும்புவார் எனவும், டிரம்புக்கு எதிராக மூன்றாம் உலக போரை நடத்த விரும்ப மாட்டார் எனவும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லர்வர் கூறியுள்ளார்.
 
சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத் தலைமையில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க கூட்டுப்படையினர் சிரியாவில் தாக்குதல் நடத்தினார்கள்.
 
இதற்கு ரஷ்யா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இதனால் மூன்றாம் உலக போர் எப்போதும் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ரஷ்யா மூன்றாம் உலக போரை எப்படி பார்க்கிறது என்பது குறித்து அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி பேசியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், எங்கள் ஜனாதிபதி புடினும், ராணுவமும் இதற்கு அனுமதி தரமாட்டார்கள் என நம்புகிறேன்.
 
புடின் மனதளவில் சமாதானத்தை தான் விரும்புகிறாரே தவிர, போரை அல்ல, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இப்படி தான் நினைப்பார் என நம்புகிறேன்.
 
இருவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் ஆவார்கள், அதனால் எந்த விடயத்திலும் சமாதானம் மேற்கொள்வதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
 
டிரம்பை நேரில் சந்தித்து பேச புடின் தயாராக உள்ளார், இது தொடர்பாக இருவரும் சமீபத்தில் போனில் பேசினார்கள் என கூறியுள்ளார்.

மூலக்கதை