பரிஸ் - வாட்டி எடுக்கும் வரலாறு காணாத வெயில்! - 1949 ஆம் ஆண்டின் பின் இன்று பதிவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  வாட்டி எடுக்கும் வரலாறு காணாத வெயில்!  1949 ஆம் ஆண்டின் பின் இன்று பதிவு!!

புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களை தொடர்ந்து, இன்று சனிக்கிழமையும் கடும் வெப்பம் நாடுமுழுவதும் நிலவி வருகிறது. 
 
ஏப்ரலில் நடுப்பகுதியில் நாட்டில் நிலவும் வழமையான வெப்பத்தை விட தற்போது 6 - 10°C வரையான வெப்பம் அதிகமாக நிலவுகின்றது. பரிசுக்குள் இன்று அதிகபட்சமாக 31.1°C வெப்பம் நிலவுகின்றது. 1949 ஆண்டின் பின்னர் பரிசுக்குள் ஏப்ரல் மாதத்தில் இந்த காலநிலை நிலவுவது இதுவே முதன்முறையாகும். 
 
நேற்று ஏப்ரல் 20 ஆம் திகதி 28.7°C வெப்பம் நிலவியது. அதைத் தொடர்ந்து, இன்று 31.1°C வெப்பமாக அதிகரித்துள்ளது. முன்னதாக 1949 ஆம் ஆண்டு ஏப்ரலில் அதிகப்படியாக 30.2°C வெப்பம் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை