இந்தியா – பிரிட்டன் முதலீடு அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்
இந்தியா – பிரிட்டன் முதலீடு அதிகரிக்கும்

புதுடில்லி : ‘இந்­தியா – பிரிட்­டன்இடையே, தயா­ரிப்பு, ராணு­வம், மருந்து உள்­ளிட்ட துறை­களில், பரஸ்­பர முத­லீ­டு­களை அதி­க­ரிக்க, எண்­ணற்ற வாய்ப்­பு­கள் உள்­ளன’ என, பிரிட்­டன் இந்­தியா வர்த்­தக கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து இந்த அமைப்பு வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: இந்­தி­யா­வில், மின்­னணு தொழில்­நுட்ப பயன்­பாடு பர­வ­லாகி வரு­கிறது. செயற்கை நுண்­ண­றிவு, சாத­னங்­கள் இடை­யி­லான இணைய பயன்­பாடு, பிளாக்­செ­யின், ‘3டி’ பிரின்­டிங் போன்ற தொழில்­நுட்­பங்­க­ளைக் கொண்ட, நான்­காம் தொழில் புரட்­சி­யில், எண்­ணற்ற வர்த்­த­கங்­கள் உரு­வாகி வரு­கின்­றன. அவற்­றில், இந்­தியா – பிரிட்­டன் பரஸ்­பர முத­லீ­டு­கள் மேற்­கொள்ள, ஏரா­ள­மான வாய்ப்­பு­கள் உள்­ளன.

தொழில் புரி­வதை சுல­ப­மாக்­கும் நடை­மு­றை­களை தொடர்ந்து மேற்­கொண்டு வந்­தால், நல்ல பயன் கிடைக்­கும்; முத­லீ­டு­கள் பெரு­கும்; பரஸ்­பர பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி காணும்.அன்­னிய நேரடி முத­லீ­டு­க­ளின் பாது­காப்பு உள்­ளிட்ட அம்­சங்­கள் அடங்­கிய, பரஸ்­பர முத­லீட்டு ஒப்­பந்­தம், இந்­தியா – பிரிட்­டன் இடையே, நீண்­ட­கால வர்த்­த­கம் மற்­றும் முத­லீட்டு உறவை வலுப்­ப­டுத்த துணை புரி­யும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை