‘5ஜி’ தொழில்நுட்பம் உயர்மட்ட குழு ஆய்வு

தினமலர்  தினமலர்
‘5ஜி’ தொழில்நுட்பம் உயர்மட்ட குழு ஆய்வு

புதுடில்லி : நாட்­டில், ‘5ஜி’ தொழில்­நுட்­பத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­மு­றை­கள் குறித்து, உயர்­மட்­டக் குழு­வில் விவா­திக்­கப்­பட்­டது.

மொபைல் போனில், அதி­வே­க­மாக, படங்­கள், தர­வு­களை அனுப்ப, ‘5ஜி’ தொழில்­நுட்­பம் உத­வு­கிறது. இதை, இந்­தி­யா­வில் அறி­மு­கப்­ப­டுத்­து­வது குறித்து ஆராய, உயர்­மட்­டக் குழு ஒன்று அமைக்­கப்­பட்டு உள்­ளது. இந்த குழு­வின், மூன்­றா­வது ஆய்­வுக் கூட்­டம், டில்­லி­யில் நடந்­தது. இதில், ‘5ஜி’ தொழில்­நுட்­பத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­மு­றை­கள் குறித்து விவா­திக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, விரை­வில், இடைக்­கால வரை­ வ­றிக்கை தாக்­கல் செய்­யப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சமீ­பத்­தில், தொலை தொடர்பு துறை செய­லர், அருணா சுந்­த­ர­ரா­ஜன் கூறும் போது, ‘5ஜி தொழில்­நுட்­பத்­தில், அனைத்து நாடு­க­ளுக்­கும் முன்­னோ­டி­யாக இருக்க, இந்­தியா விரும்­பு­கிறது. ‘ஜூன் மாதத்­துக்­குள்,‘5ஜி’ தொடர்­பான வரை­வ­றிக்கை தாக்­கல் செய்­யப்­படும்’ என, தெரி­வித்­தி­ருந்­தார். ‘5ஜி’ தொழில்­நுட்ப உயர்­மட்­டக் குழு­வின் அடுத்த கூட்­டம், ஜூன், 14ல் நடை­பெற உள்­ளது.

மூலக்கதை