பணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
பணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரிப்பு

புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிந்தைய நிதியாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றமும் அதிகரித்திரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முந்தைய நிதியாண்டில் (2015-16) 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ஆனால் 2016-17 நிதியாண்டில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன.

இதேபோல், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் 2015-16 நிதியாண்டை விட, 2016-17 நிதியாண்டில் 400 மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை