நாடு முழுவதும் எரிக்கும் வெப்பம்! - பரிசுக்குள் 27°C வரை பதிவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
நாடு முழுவதும் எரிக்கும் வெப்பம்!  பரிசுக்குள் 27°C வரை பதிவு!!

இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் நிலவுகிறது. நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் 13°C வெப்பத்தில் இருந்து 30°C வரை இன்று பதிவாகியுள்ளது. 
 
இன்று வெள்ளிக்கிழமை காலை முதலே மிக தெளிவான காலநிலையும் வெப்பமும் நாடு முழுவதும் நீடிக்கிறது. பரிசுக்குள் இன்று காலை 15°c வெப்பமும் நிலவியது. அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு பின்னர் 27°c வெப்பத்தை தொட்டது. நேற்று வியாழக்கிழமை பரிசுக்குள் 29°c வரை நிலவியிருந்தது. அதில் இருந்து இன்று வெப்பம் குறைந்திருந்தாலும், கோடை காலத்தின் தகதகக்கும் வெப்பம் பரிஸ் மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது என பலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். 
 
குறிப்பாக, நெருக்கடியான வீதிகள், மெற்றோக்கள் போன்றவற்றில் சனத்தொகை அதிகமாக உள்ளதால் மேலும் இந்த வெப்பம் மேலும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் இருந்து, நேற்று வியாழக்கிழமை மற்றும் இன்று வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்கள் மாத்திரமே அதிகளவான வெப்பம் பதிவாகிய நாளாக உள்ளது.

மூலக்கதை