அதிகாரிகளுடன் கை குலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்! - குடியுரிமை மறுப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
அதிகாரிகளுடன் கை குலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்!  குடியுரிமை மறுப்பு!!

பிரெஞ்சு குடியுரிமை கோரியிருந்த பெண் ஒருவருக்கு இறுதி நிமிடத்தில், குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிகாரிகளுடன் கை குலுக்க மறுத்துள்ளதால் இந்த நிராகரிப்பு இடம்பெற்றுள்ளது. 
 
பிரான்சின் தென்கிழக்கு பிராந்தியமான Isère மாவட்டத்தில், இஸ்லாமிய பெண் ஒருவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் குடியுரிமைக்கான கோரிக்கையை வைத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு அரசு, அவருக்கு குடியுரிமை வழங்கி, அதற்கான விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தது. விழாவில் கலந்துகொண்ட குறித்த இஸ்லாமிய பெண்ணுக்கு அரச அதிகாரிகள் கை குலுக்க கைகளை நீட்டியுள்ளனர். ஆனால் குறித்த அப்பெண், கை குலுக்க மறுத்துள்ளார். 
 
தங்கள் மத வழக்கப்படி கை குலுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அப்பெண் தெரிவித்துள்ளார். கை குலுக்கும் சமத்துவம் இல்லை எனில், பிரெஞ்சு குடியுரிமை கொண்டவராக இருக்க முடியாது என அரச அதிகாரிகள் அவருக்கான குடியுரிமையை இரத்து செய்தனர். 
 
பின்னர், Conseil d'Etat நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அங்கும் அரசுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வந்தது. பிரான்ஸ் வருடத்துக்கு 120,000 பேருக்கு குடியுரிமை வழங்குகின்றது. இதில் 20,000 பேர் திருமணம் செய்துகொள்வதன் மூலம் குடியுரிமை பெற்றுக்கொள்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

மூலக்கதை