இல்-து-பிரான்சை விட்டு வெளியேற ஆசைப்படும் மக்கள்! - அதிர்ச்சி கருத்துக்கணிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
இல்துபிரான்சை விட்டு வெளியேற ஆசைப்படும் மக்கள்!  அதிர்ச்சி கருத்துக்கணிப்பு!!

இல்-து-பிரான்சுக்குள் வசிக்கும் மக்களில், பத்தில் ஏழு பேர் இம் மாகாணத்தை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 
 
இவ்வாரம் செவ்வாய்க்கிழமை இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அதிகரித்த சனத்தொகை, சுற்றுச்சூழல் மாசடைதல், விலை அதிகமான வாழ்வாதர தேவைகள் என பல காரணங்களை கருத்தில் கொண்டு இந்த விருப்பத்தை மக்கள் தெரிவித்துள்ளனர். 
 
Essonne இல் வசிக்கும் 76 வீதமான மக்களும், Seine-Saint-Denis இல் வசிக்கும் 75 வீதமான மக்களும், Seine-et-Marne மற்றும் Val-de-Marne இல் வசிக்கும் 74 வீதமான மக்களும் தங்கள் நகரத்தை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
 
Val-d'Oise இல் 72 வீதமான மக்களும், Hauts-de-Seine இல் 69 வீதமான  மக்களும், Yvelines இல் 66 வீதமான மக்களும் வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். 
 
பரிசுக்குள் இந்த வீதம் 56 ஆக உள்ளது. போக்குவரத்து நெரிசல், தரிப்பிட வசதி, விடுகளின் விலையேற்றம் என பல்வேறு குழப்பங்கள் பரிசுக்குள் நிலவுகின்ற போதும் பரிசை விட்டு வெளியேற, வீத அடிப்படையில் குறைவான மக்களே விரும்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை