பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாஜ எம்எல்ஏக்கள் முதலிடம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாஜ எம்எல்ஏக்கள் முதலிடம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 48 எம்பி, எம்எல்ஏக்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  நாடு முழுவதும் ஆயிரத்து 580 எம். பி. , எம். எல். ஏ. ,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதில் 48 பேர் மீது பெண்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. 48 பேரில் 45 பேர் எம். எல். ஏ. ,க்கள், 3 பேர் எம். பி. ,க்கள்.

அதிகபட்சமாக பாஜவை சேர்ந்த 12 பேர் மீதும், சிவசேனாவை சேர்ந்த 7 பேர் மற்றும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 6 பேர் மீது பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்ததில் இத்தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளன எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை