உ.பி. மேலவை தேர்தல் யோகி ஆதித்யநாத் வெற்றி: பீகாரில் நிதிஷ்குமார் தேர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உ.பி. மேலவை தேர்தல் யோகி ஆதித்யநாத் வெற்றி: பீகாரில் நிதிஷ்குமார் தேர்வு

லக்னோ: உத்தரபிரதேச சட்டமேலவை உறுப்பினராக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 13  பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே போல பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் அந்த மாநிலத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மேலவையில் காலியான 13 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் பாஜ சார்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் மகேந்திரசிங், ரசா உள்ளிட்ட 10 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பாஜவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் சார்பாக ஒருவரும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் சார்பாக தலா ஒருவரும் நிறுத்தப்பட்டனர்.

13 காலியிடங்களுக்கு 13 போ் மட்டுமே போட்டியிட்டனர்.

இதனால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி அசோக் நேற்று வெளியிட்டார். இதே போல் பீகார் மேலவையில் 11 காலிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மாநில முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வரும் பாஜ தலைவருமான சுஷில் குமார் மோடி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி உள்ளிட்ட 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்

.

மூலக்கதை