15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி!

 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன.
 
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட முடிவு. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் கிறிஸ் கெயிலும் களமிறங்கினர்.
 
இந்த ஜோடி அரை சதம் கடந்த நிலையில், அணியின் எண்ணிக்கை 53 ஆக இருக்கும்போது ராகுல் 18 ஓட்டங்களில் அவுட்டானார்.
 
அடுத்து இறங்கிய மயங்க் அகர்வால் 9 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியுடன் 18 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
 
அப்போது பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 83 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அடுத்த கருண் நாயர் களமிறங்கினார்.
 
ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தாலும் மறுபுறம் தூணாக நின்றார் கெயில். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் பஞ்சாப் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
 
ஒரு ஓவருக்கு 10 ஓட்டங்கள் என்ற அளவில் ஸ்கோர் எகிறியது.
 
சிறப்பாக ஆடிய இந்த ஜோடி அணியின் எண்ணிக்கை 168 ஆக இருக்கும்போது பிரிந்தது. கருண் நாயர் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆரோன் பிஞ்ச் இறங்கினார்.
 
அதிரடியில் மிரட்டிய கிறிஸ் கெயில் இந்த தொடரின் முதல் சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் எடுத்தது.
 
கிறிஸ் கெயில் 63 பந்துகளில் 11 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 104 ஓட்டங்களும், ஆரோன் பிஞ்ச் 14 ஓட்டங்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
 
ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
 
இதைத்தொடர்ந்து, 194 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக விர்திமான் சகா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
 
எதிர்பாராத விதமாக ஷிகார் தவானுக்கு காயம் ஏற்பட அவர் பெவிலியன் திரும்பினார். பின்னர் விர்திமான் சாகா 6(7), யுசுப் பதான் 19(13) மொகித் சர்மா பந்து வீச்சில் போல்ட்டாகி வெளியேறினர்.
 
சிறப்பாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் 54(41) ஓட்டங்களில் அவுட்டாகி வெளியேறினார். தீபக் ஹோடா 5(5) ஓட்டங்களில் வெளியேற்றப்பட்டார்.
 
கடைசிவரை போராடிய மணீஷ் பாண்டே 57(42), ஷாகிப் அல் ஹசன் 24(12) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொகித் சர்மா, அன்ட்ரூ டை தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இறுதியில் ஹைதராபாத் அணி 178 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூலக்கதை