கோவை விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தடகள போட்டிகள் தொடக்கம்

தினகரன்  தினகரன்

கோவை: தேசிய அளவிலான இளையோருக்கான தடகளப்போட்டிகள் இன்று கோவை விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது. வருகின்ற 22 ஆம் தேதி வரை இந்த போட்டியானது நடத்தப்படுகிறது. குறிப்பாக பல்வேறு மாநிலங்களிலிருந்து 800 க்கும் மேற்பட்ட வீரர்கள்,வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கு பெற்றுள்ளனர்.குறிப்பாக 32 மாநிலங்களிலிருந்து வீரர்கள் இதில் பங்கு பெற்றுள்ளனர். ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 44 வகையான தடகள போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வீரர்கள்,வீராங்கனைகள் பங்கு பெற்றதன் காரணமாக அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, அடிப்படை வசதி உள்ளிட்ட வசதிகளை விளையாட்டுத்துறை சார்பாக செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினத்தை பொறுத்த வரையில் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஓட்ட பந்தயம் உள்ளிட்ட போட்டிகளானது நடத்தப்படுகிறது போட்டிகளின் முடிவுகளில் அவ்வபோது பரிசுகளானது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டை பொறுத்தவரை இந்த போட்டியானது லக்னோவில் நடைபெற்து. அந்த போட்டியில் ஹரியானா,கேரளா உள்ளிட்ட அணிகள் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதில் தமிழக அணியானது 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் குறிப்பாக அதுவும் கோவையில் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த வருடம் தமிழக அணி முதலிடத்தை பெற வேண்டும் என்ற முயற்சியில் விளையாடி வருகின்றனர். இந்த போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெரும் வீரர், வீராங்கனைகள் வருகிற மாதங்களில் தெற்காசிய ஆசிய  மற்றும் சர்வதேச அளவிலான இளையோருக்கான தடகள போட்டிகளில் பங்கு பெரும் வாய்ப்பையும் பெற உள்ளனர்.

மூலக்கதை