இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

ஜெர்மனியின் டேகல் (Tegel) என்ற வட்டாரத்தில் உள்ள மத்திய ரயில் நிலையத்திற்கு அருகே 500 கிலோகிராம் எடையுள்ள வெடிகுண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டது.
 
இரண்டாம் உலகப் போரின்போது அது பிரிட்டனால் வீசியெறியப்பட்டது. ஆனால் இன்றுவரை அது வெடிக்கவில்லை.
நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் மேற்கொள்ளபட்ட கட்டுமானப் பணிகளின்போது இன்னும் வெடிக்காமல் இருந்த அந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
 
சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ரயில்நிலையத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
 
வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
 
ரயில் நிலையத்திற்கு 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையத்தின் விமானச் சேவைகள் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்று பயணிகள் எச்சரிக்கப்பட்டனர்.

மூலக்கதை