66 ஐ எட்டியது இந்திய ரூபாய் மதிப்பு

தினமலர்  தினமலர்
66 ஐ எட்டியது இந்திய ரூபாய் மதிப்பு

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து 66 என்ற நிலையை எட்டி உள்ளது. இறக்குமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு 25 காசுகள் சரிந்து 66.05 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 65.80 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவுடன் காணப்படுகின்றன.

மூலக்கதை