கியூபா அதிபராக மேக்வெல் தேர்வு

தினமலர்  தினமலர்
கியூபா அதிபராக மேக்வெல் தேர்வு

ஹவானா, கியூபா அதிபராக, மேக்வெல் டயாஸ், 57, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவுக்கு அருகேயுள்ள மிகச் சிறிய நாடு, கியூபா. அதிபராக, பிடல் காஸ்ட்ரோ, 30 ஆண்டு பதவி வகித்தார். பின், அவரது சகோதரர், ரவுல் காஸ்ட்ரோ, 87, கடந்த, 10 ஆண்டுகளாக அதிபராக உள்ளார்.உடல்நிலை கருதி, அதிபர் பதவியில் இருந்து ரவுல் விலகினார். புதிய அதிபரை தேர்வு செய்ய, கியூபா பார்லிமென்ட் கூட்டம் நேற்று நடந்தது. துணை அதிபராக இருக்கும், மேக்வெல் டயாஸ், அதிபர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, வேறு யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து, மேக்வெல் டயாஸ், அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், முதல் முறையாக, காஸ்ட்ரோ குடும்பத்தை சேராத ஒருவர், கியூபா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை