35 ஆண்டுகளுக்கு பின் சினிமா பார்த்த மக்கள்

தினமலர்  தினமலர்
35 ஆண்டுகளுக்கு பின் சினிமா பார்த்த மக்கள்

ரியாத், சவுதி அரேபியாவில், 35 ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக, நேற்று முன்தினம், ஹாலிவுட் படம் திரையிடப்பட்டது; இதை, மன்னர் குடும்பத்தினரும், பொதுமக்களும் பார்த்து ரசித்து பார்த்தனர்.வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், இஸ்லாம் மதக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி, 1980களின் துவக்கத்தில், சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், சவுதியின் பட்டத்து இளவரசரான, முகமது பின் சல்மான், பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு போட்டிகளை பார்க்க அனுமதி என, பல அதிரடியான சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார்.இதையடுத்து, 'விரைவில், தியேட்டர்களில் திரைப்படங்கள் திரையிடப்படும்' என, சவுதி அரசு, சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி, நேற்று முன்தினம், ரியாத்தில், திரையரங்கை திறந்து வைத்து, சவுதி இளவரசர், முகமது பின் சல்மான், பிளாக் பாந்தர் படத்தை பார்த்தார். மன்னர் குடும்பத்தினரும், படத்தை பார்த்து ரசித்தனர். மேலும், சவுதியின் பல இடங்களில் உள்ள திரையரங்குகளில், பொதுமக்களும் படம் பார்த்தனர்.

மூலக்கதை