A25 சாலையில் பெரும் விபத்து! - 18 ஊனமுற்ற சிறுவர்கள் உயிருக்கு போராட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
A25 சாலையில் பெரும் விபத்து!  18 ஊனமுற்ற சிறுவர்கள் உயிருக்கு போராட்டம்!!

நேற்று புதன்கிழமை A25 சாலையில் பெரும் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஏற்றி வந்த பேரூந்து ஒன்று, மகிழுந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 
 
புதன்கிழமை காலை 10.30 மணி அளவில்,  Flêtre " (Bailleul நகருக்கு அருகே) நகரை ஊடறுக்கும் A25 சாலையில் (Lille இல் இருந்து Dunkerque  செல்லும்) விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான பேரூந்தின் உடல் ஊனமுற்ற சிறுவர்கள் பயணித்தனர். அதில் 18 சிறுவர்கள் காயமடைந்தனர். அவர்களுள் மூவர் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.  
 
50 தீயணைப்பு படையினர், 10 அவசர ஊர்திகள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். தவிர, உலங்கு வானூர்தி மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். பிற்பகல் 1.30 வரை அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

மூலக்கதை