இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதோர் 19 கோடி பேர்: உலக வங்கி

தினமலர்  தினமலர்
இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதோர் 19 கோடி பேர்: உலக வங்கி

வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடியின் 'ஜன்தன் யோஜனா' வெற்றியடைந்த போதும், இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாமல் 19 கோடி பேர் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

2வது இடம்:

இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: உலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு(225 மில்லியன்) அடுத்து இந்தியா இரண்டாவது இடம்(190 மில்லியன்) வகிக்கிறது. உலகில் வங்கி கணக்கு இல்லாத 11 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் 2011ம் ஆண்டு முதல் வயது வந்தவர்களின் வங்கி கணக்கு எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆதாரே காரணம்:

மோடி அரசால் துவங்கப்பட்ட 'ஜன்தன் யோஜனா' திட்டம் மூலம் 2018 மார்ச் 31ம் தேதி வரை ரூ.31 கோடி கூடுதல் நிதி வங்கிகளுக்கு கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களை விட ஆண்கள் 20 சதவீத வங்கி கணக்குகளை அதிகம் கொண்டிருந்தனர். இந்த பாலின பாகுபாடு தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த முன்னேற்றத்துக்கு ஆதார் நடவடிக்கை தான் காரணம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை