ரஷ்யாவுக்கும் எனக்கும் 'ஏழாம் பொருத்தம்': டிரம்ப்

தினமலர்  தினமலர்
ரஷ்யாவுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்: டிரம்ப்

வாஷிங்டன்: ரஷ்யா மீது அடுத்தடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் டிரம்ப் கூறியது: அமெரிக்க ஊடகங்கள் என்னை ரஷ்யாவுக்கு ஆதரவானவராக காட்ட தீவிர முயற்சி செய்கின்றன. ரஷ்யாவுக்கு எதிராக என்னைவிட கடுமையாக நடந்து கொண்டவர்கள் யாரும் கிடையாது என்பது விரைவில் உறுதியாகும். ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் தயாராக இருக்கிறோம், என்றார்.

இருப்பினும், அடுத்த நடவடிக்கையை பொருத்தே டிரம்பின் ரஷ்ய பாசத்தை முடிவு செய்ய முடியும் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை