‘தனியார்மயமாக்க காலம் கனியவில்லை’

தினமலர்  தினமலர்
‘தனியார்மயமாக்க காலம் கனியவில்லை’

புதுடில்லி : ‘‘பொதுத் துறை வங்­கி­களை தனி­யார் மய­மாக்க இன்­னும் காலம் கனி­ய­வில்லை,’’ என, ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா’ தலை­வர், ரஜ­்னிஷ் குமார் தெரி­வித்­துள்­ளார்.

அவர் மேலும் பேசி­ய­தா­வது: பொதுத் துறை வங்­கி­களில் மட்­டு­மின்றி, தனி­யார் வங்­கி­க­ளி­லும் தவ­று­கள் நடக்­கின்றன. அத­னால், பொதுத் துறை வங்­கி­களை தனி­யார் மய­மாக்­கு­வ­தால், தவறே நடை­பெ­றாது எனக் கூற முடி­யாது. இரு துறை­க­ளி­லும், நல்­லவை, கெட்­டவை கலந்து இருக்­கின்றன.

பொதுத் துறை வங்­கி­களை மிகக் பெரிய அள­வில் தனி­யார்­ம­ய­மாக்­கும் அள­விற்கு, இந்­தி­யா­வில் சமூக பொரு­ளா­தார சூழல் இல்லை. தற்­போ­தைய வளர்ச்­சிப்­படி, அத்­த­கைய நிலை ஏற்­பட, இன்­னும், 50 ஆண்­டு­கள் ஆகும். வர்த்­தக நோக்­கில் செயல்­படும் தனி­யார் வங்­கி­களை போல, பொதுத் துறை வங்­கி­களை கருத முடி­யாது. அவற்­றுக்கு, சமூ­கத் தேவை­களை பூர்த்தி செய்ய வேண்­டிய கட­மை­யும் உள்­ளது. இவ்­வாறு அவர் பேசி­னார்.

கடந்த, 11 ஆண்­டு­களில், மத்­திய அரசு, பொதுத் துறை வங்­கி­களில், 2.60 லட்­சம் கோடி ரூபாய் பங்கு மூல­த­னம் மேற்­கொண்­டுள்­ளது. ஆனால், அதற்­கேற்ப வங்­கி­களின் வளர்ச்சி இல்லை என்­ப­தால், அவற்றை தனி­யார் மய­மாக்க வேண்­டும் என, சில தொழில் கூட்­ட­மைப்­பு­கள் கோரு­கின்றன.

மூலக்கதை