மினி வாலிபால்: தமிழக அணி அறிவிப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: மிசோரம் மாநிலத்தில் நடைபெற உள்ள மினி தேசிய வாலிபால் போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.வட கிழக்கு மாநிலம் மிசோரமில் உள்ள அய்ஸ்வாலில்  14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 26வது மினி தேசிய வாலிபால் போட்டி வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணிகளை தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின் பொதுச் செயலாளர் சித்திரைபாண்டியன் நேற்று அறிவித்தார்.அதன்படி தமிழக சிறுவர் அணியில் சஞ்ஜெய், தினேஷ்குமார், வருண், பிரேமசாகர், ராகேஷ், வசந்தகுமார், விக்ரம், சுரேஷ், தீபக், நவீன், நிதீஷ், சந்தோஷ் ஆகியோர் இடம் பெற்றுள்றனர். சிறுவர் அணியின் பயிற்சியாளராக கிருஷ்ணமூர்த்தியும்,  உதவி பயிற்சியாளராக ஜான்சற்குணமும், மேலாளராக ஜெயகுமாரும் செயல்படுவர். அதேபோல் சிறுமிகளுக்கான அணியில் திவ்யபாரதி, சுஜி, கோபிகா, ஆனாந்தி, பிரீதிகா, சந்தியா, மாலதி, ஜனனி, பர்மிதா, சரண்யா, பவித்ரா ஆகியோர் இடம்  பெற்றுள்ளனர். இந்த அணியில் பயிற்சியாளராக முகம்மது தவுபீக், மேலாளராக ஹரிபிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை