ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது கொல்கத்தா ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணாவுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது கொல்கத்தா ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணாவுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் பாராட்டு

 ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15வது லீக் போட்டி, ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. டி ஆர்க்கி ஷார்ட் 44 (43 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரஹானே 36 (19 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்கள் எடுத்தனர்.

நிதிஷ் ராணா, டாம் கர்ரன் தலா 2, பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஷிவம் மாவி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட்டிங் செய்த கொல்கத்தா, 18. 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ராபின் உத்தப்பா 48 (36 பந்துகள், 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 42 (23 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிச்சர்), நிதிஷ் ராணா 35 (27 பந்துகள், 2 பவுண்டரி, 1 சிக்சர்), சுனில் நரைன் 35 (25 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்கள் விளாசினர். கிருஷ்ணப்பா கௌதம் 2 விக்கெட் வீழ்த்தினார்.



 வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘’தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது (இதற்கு முந்தைய போட்டியில், டெல்லி அணியை கொல்கத்தா வீழ்த்தியிருந்தது). நல்ல விஷயங்கள் எல்லாம் மெதுவாக, சரியான திசையில் பயணிக்க தொடங்கியுள்ளன.

எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ராபின் உத்தப்பாவின் பேட்டிங் அற்புதமாக இருந்தது.

எங்கள் அணியின் பீல்டிங், கடைசி கட்ட ஓவர்கள் பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு உள்ளிட்ட அம்சங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. கடந்த ஆண்டு மும்பை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட நிதிஷ் ராணா, தற்போது கொல்கத்தா அணிக்கு வந்துள்ளார்.

அவர் தரமான வீரர்’’ என்றார்.

 இந்தியாவுக்கு விளையாட வேண்டும்
கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா, ஆல் ரவுண்டராக அசத்தி வருகிறார்.

நேற்றைய போட்டியில் அவர்தான் ஆட்ட நாயகன். இதற்கு முன்பாக நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும், அவர்தான் ஆட்ட நாயகன்.

தொடர்ச்சியாக 2 போட்டிகளில், 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ள அவர் கூறுகையில், ‘’உள்ளூர் கிரிக்கெட்டிலும், வலையிலும் நான் தொடர்ச்சியாக பந்து வீசி கொண்டிருக்கிறேன். கடைசி 2 போட்டிகளும் எங்களுக்கு மிக முக்கியமானவை.

அந்த 2 போட்டிகளிலும் அதிர்ஷ்டவசமாக நான் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளேன்.

எளிதாக விளாசக்கூடிய ‘லூஸ்’ பந்துகள் எங்களுக்கு அதிகம் கிடைக்கவில்லை.

கிடைக்கும் ஒரு சில பந்துகளை நாங்கள் பவுண்டரிக்கு விளாசியிருக்க வேண்டும். ஆனால் அதில் ஒரு சில வாய்ப்புகளை தவறவிட்டதால், என் மீதே எனக்கு கோபம் வந்தது.

இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உள்ளது. ஆனால் தற்போது மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறேன்’’ என்றார்.


.

மூலக்கதை