டி வில்லியர்ஸ் அல்லது கோஹ்லி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
டி வில்லியர்ஸ் அல்லது கோஹ்லி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்?

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் கேப்டனாக உள்ளார். தென் ஆப்ரிக்க அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ், அவரது தலைமையில், பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர்கள் இருவரில், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்ற விவாதம் மிக நீண்ட வருடங்களாக நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் ஏபி டி வில்லியர்ஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘’தற்போதைய தருணத்தில், விராட் கோஹ்லிதான் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மேன்’’ என தெரிவித்துள்ளார்.


அதே நேரத்தில் விராட் கோஹ்லி அளித்த ஒரு பேட்டியில், ‘’ஏபி டி வில்லியர்ஸ் போன்று அதிரடியாக ஷாட்களை விளையாடும் திறன் எனக்கு இல்லை’’ என பெருந்தன்மையாக தெரிவித்துள்ளார்.

 

.

மூலக்கதை