பரிஸ் - நான்காவது தளத்தில் இருந்து விழுந்த இரண்டரை வயது சிறுவன்!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  நான்காவது தளத்தில் இருந்து விழுந்த இரண்டரை வயது சிறுவன்!

நேற்று புதன்கிழமை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து இரண்டரை வயது சிறுவன் ஒருவன் கீழே விழுந்துள்ளான்.
 
மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், உயிருக்குப்போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Square Bouleaux கட்டிடத்தின் நான்காவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளான். ஜன்னல் வழியாக விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்திருந்த போது, மிக மோசமாக பாதிக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக தெரிவித்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 
 

மூலக்கதை