ஹாங்காங்கில் பதுங்கியுள்ள நீரவ் மோடி விவரங்களை கேட்கும் சர்வதேச போலீஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹாங்காங்கில் பதுங்கியுள்ள நீரவ் மோடி விவரங்களை கேட்கும் சர்வதேச போலீஸ்

புதுடெல்லி: வங்கியில் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் விபரங்களை, சர்வதேச போலீஸ் கேட்டுள்ளது. இதற்கான விவரங்களை தயார் செய்யும் பணியில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வைர வியாபாரியான நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 12,000 கோடி அளவுக்கு மோசடி செய்தார். இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து நீரவ் மோடி, அவரது உறவினர்கள் வெளிநாடுக்கு தப்பினர். இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீரவ் மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
 
இந்நிலையில், சீனாவில் உள்ள ஹாங்காங்கில், நீரவ் மோடி பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

அவரை கைது செய்ய ஒத்துழைக்குமாறு ஹாங்காங் நிர்வாகத்திடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. மேலும், நீரவ் மோடி தப்பி விடாமல் தடுக்கும் பொருட்டு, சர்வதேச போலீஸ் அமைப்பான ‘இன்டர்போல்’ உதவியை மத்திய அரசு நாடியது.



இந்நிலையில், நீரவ் மோடியின் வழக்குகள் தொடர்பான விவரங்களை அனுப்பி வைக்குமாறு பிரான்சில் உள்ள இன்டர்போல் தலைமையக அதிகாரிகள், மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

நீரவ் மோடி விவகாரம்  தொடர்பான ஆவணங்களை ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யும் பணியை சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனர்.  

.

மூலக்கதை