கவுன்டி கிரிக்கெட்டில் இஷாந்த் அசத்தல்

தினகரன்  தினகரன்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிளப் கிரிக்கெட் தொடரில், சசெக்ஸ் அணிக்காக விளையாடும் இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா முதல் போட்டியிலேயே 5 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார். பர்மிங்காமில் வார்விக்‌ஷேர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இஷாந்த் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் (20.2-4-53-3) மற்றும் 2வது இன்னிங்சில் 2 விக்கெட் (9-3-16-2) வீழ்த்தினார். கவுன்டி சீசனின் முதல் 2 மாதங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணி வீரர் செதேஷ்வர் புஜாரா யார்க்‌ஷயர் அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை