ட்வீட் கார்னர்...ராக் ஸ்டார்ஸ் நாங்க!

தினகரன்  தினகரன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங், டுவைன் பிராவோவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பியை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளதுடன், ‘ராக் ஸ்டார்களின் செல்பி இது. பிராவோ பக்கத்தில் இருந்தால் கொண்டாட்டத்துக்கு பஞ்சம் ஏது’ என தகவல் பதிந்துள்ளார். சிஎஸ்கே அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

மூலக்கதை