ஐபிஎல் டி20 லீக் : ராஜஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா ரைடர்ஸ்

தினகரன்  தினகரன்

ஜெய்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வீரர் ஷார்ட் 44 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இறுதியில் 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்த கொல்கத்தா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது.

மூலக்கதை