உற­வி­னர் வீட்டிற்கு சென்ற மகனுக்கு தந்தை செய்த கொடூரம்! மாங்­கு­ளத்தில் சம்பவம்

PARIS TAMIL  PARIS TAMIL
உற­வி­னர் வீட்டிற்கு சென்ற மகனுக்கு தந்தை செய்த கொடூரம்! மாங்­கு­ளத்தில் சம்பவம்

மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் பாட­சாலை மாண­வன் ஒருவர், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­துச் சிறு­வ­னவே வைத்­தி­ய­சா­லை­யில் இவ்­வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
சிறு­வன் கடந்த சில நாள்­க­ளாக வீட்­டிற்கு வரா­மல் உற­வி­னர் வீட்­டில் தங்கி இருந்­த­தா­க­வும் நேற்­றுக் காலை வீட்­டிற்கு வந்த சிறு­வனை அவ­ரது தந்தை தாக்­கி­யுள்­ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த சிறு­வனை தாய் உட­ன­டி­யாக மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று சென்றுள்ளார்.
 
அங்­கி­ருந்து உட­ன­டி­யாக நோயா­ளர் காவு வண்டி மூலம் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சிறு­வன் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்­பிட்­ட­னர்.
 
சிறு­வ­னின் இரு கால்­க­ளும் முறிந்த நிலை­யில், கை, முகம், முதுகு பகு­தி­க­ளில் பலத்த காயங்­கள் காணப்­ப­டு­வ­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.  
 
சிறு­வ­னின் தந்தை ஏற்கனவே தனது மக­ளுக்கு தாக்கிய குற்­றச்­சாட்­டில் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­வர் என்றும் பொலி­ஸார் குறிப்­பிட்­னர்.

மூலக்கதை