கீஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள குமரி மீனவர்கள்!

விகடன்  விகடன்
கீஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள குமரி மீனவர்கள்!

கீஸ் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த மீனவர்கள் சகாய ரென்ஸ், சகாய அஜய் ஆன்றனி அனிஷ், இளங்கோ, கிறிஸ்டி, பெரியதாழையைச் சேர்ந்த பிரைட் மேன், கூடுதாழையைச் சேர்ந்த நிவேதன் ஆகியோர் பகரைன் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்துவந்தனர். இந்த நிலையில் கடந்த 8.2.2018 அன்று பகரைனிலிருந்து முகமது நாசர் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாகக் கூறி 12.2.2018 அன்று இரான் நாட்டு கடற்படையினர் 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இரான் நாட்டின் கீஸ் தீவின் துறைமுகத்தில் சிறைவைத்துள்ளனர். சிறைவைக்கப்பட்டுள்ள 6 மீனவர்களும் உணவும் உடையும் கிடைக்காமல் தவிப்பதாகவும். அவர்களை மீட்டு சொந்த ஊர் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களின் உறவினர்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

மூலக்கதை