சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் சசிதரூர் மீது வழக்கு பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் சசிதரூர் மீது வழக்கு பதிவு

புதுடெல்லி: சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அவரது கணவரும், காங்கிரஸ் எம்பியுமான சசிதரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுனந்தா புஷ்கர் கடந்த 2014ம் ஆண்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கணவர் சசிதரூருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது உடலில் விஷம் கலந்திருந்ததாக செய்திகள் வெளியாகின.

எனினும் சுனந்தாவின் மரணம் குறித்த மர்மம் நீடித்து வந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார், கணவர் சசிதரூர் உள்ளிட்டோரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.சுனந்தாவின் ரத்த மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறி்க்கையின்படி அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

விசாரணை அறிக்கையை இன்னும் ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர். இந்நிலையில், சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியது, ஆதாரங்களை அழித்தது என 2 பிரிவுகளின் கீழ் சசிதரூர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சசிதரூருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

.

மூலக்கதை