கர்நாடக சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சாமூண்டீஸ்வரியில் சித்தராமையா போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சாமூண்டீஸ்வரியில் சித்தராமையா போட்டி

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 218 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

சாமுண்டீஸ்வரியில் முதல்வர் சித்தராமையாவும், கொரட்டக்கெரேயில் மாநில தலைவர் பரமேஸ்வரும் போட்டியிடுகிறார்கள்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது. மே 15ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே 126 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பா. ஜனதா கட்சி 72 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணி அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் டெல்லியில் நடந்து வந்தது.

கடந்த 9-ந்தேதி தொடங்கிய இந்த பணி 12-ந்தேதி வரை நடைபெற்றது.   இரு தொகுதிகளில் போட்டியிடும் சித்தராமையாவின் முடிவுக்கு சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், தேர்தல் பரிசீலனை குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில், ராகுல்காந்தி முன்னிலையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மாலை பெங்களூருவுக்கு திரும்பினர். இதைதொடர்ந்து நேற்று இரவு 8. 30 மணி அளவில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.   6 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

மேலும் வேட்பாளர் பட்டியலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவும், கொரட்டக்கெரேயில் பரமேஸ்வரும் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.   சித்தராமையாவின் மகனான யதீந்திரா வருணா தொகுதியிலும், மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ஜெயநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

நடிகர் அம்பரீசுக்கு மண்டியா தொகுதியும், மந்திரியும், நடிகையுமான உமாதெரதால் தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

.

மூலக்கதை