நாடு முழுவதும் வறட்சியின் பிடியில் 153 மாவட்டங்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் வறட்சியின் பிடியில் 153 மாவட்டங்கள்

புதுடெல்லி: இந்திய துணை கண்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரண்டு பருவ மழைகள் பெய்து வருகின்றன. இந்தியா முழுமைக்கும் தென்மேற்கு பருவமழையும், தமிழகமும் அதனை ஒட்டிய சில பகுதிகள் மட்டும் வடகிழக்கு பருவ மழையையும் நம்பியுள்ளன.

கடந்த ஆண்டு வழக்கத்தை காட்டிலும் குறைவாகவே மழை பெய்தது. இந்த ஆண்டு இயல்பான அளவு மழை பெய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது.   இந்நிலையில் கடந்த 2017 அக்டோபர் முதல் 2018 மார்ச் வரை 140 மாவட்டங்கள் மழை இல்லாததால் மிக கடுமையாக வறண்டுள்ளன.

மற்ற 109 மாவட்டங்கள் பாதியளவும், 156 மாவட்டங்கள் சிறிதளவும் வறண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நாடு முழுவதும் உள்ள 153 மாவட்டங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கோடையில் நாட்டின் பல பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்க வேண்டியாக இருந்தாலும், இந்த ஆண்டு மழைக்காலத்தின் போது பல பகுதிகளில் மழை இல்லை.

இதனால் கோடையில் அப்பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை