எஸ்.சி,எஸ்டி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எஸ்.சி,எஸ்டி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை: எஸ். சி,எஸ்டி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட  வலியுறுத்தி சென்னையில் மு. க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட  வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின்  9வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் இன்று காலை 10 சென்னை  வள்ளுவர் கோட்டம் அருகே எதிர்க்கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே. ஆர். ராமசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில  செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழக துணை தலைவர் கலி. பூங்குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப. வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எஸ். சி, எஸ். டி.

சட்டத்தை நீர்த்து போக செய்கின்ற மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 இதேபோல தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சி கூட்டம் : காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் ெதாடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்று மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு. க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.

இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 9 கட்சிகள் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை