ஆபத்தை தேடி செல்லும் முல்லைத்தீவு மக்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆபத்தை தேடி செல்லும் முல்லைத்தீவு மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அதிகரிக்கும் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் முல்லைத்தீவு பெருங்கடல் நோக்கி படையெடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று இவர்கள் பாதுகாப்பற்ற கடல் பகுதியில் நீராடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
 
குறித்த கடற்படப்பில் கடந்த ஆண்டு பாடசாலை மாணவர்கள் மூவர் சென்று நீராடியிருந்த நிலையில் அவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
 
இதனையடுத்து அந்த கடல் பகுதி குளிப்பதற்கு பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை