மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு; 11 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் விடுதலை

விகடன்  விகடன்
மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு; 11 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் விடுதலை

ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுதலை செய்தது தேசிய புலனாய்வு  சிறப்பு நீதிமன்றம்.

கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத் சார்மினார் அருகில் உள்ள மெக்கா மஸ்ஜித்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அன்று வெள்ளிக் கிழமை என்பதால் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த 5 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு குற்றவாளிகளாக அறிவித்தது. கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

இன்று காலை குற்றவாளிகள் அனைவரும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பிறகு வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போதிய ஆதாரம் இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்தாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மூலக்கதை